பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: யு மும்பா - கோவா மோதல்!

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் சீசன் 7 தொடரின் ஒரு பகுதியாக ஜூலை 9-இல் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் யு மும்பா-2 முறை சாம்பியன் டெம்போ கோவா அணிகள் மோதுகின்றன.

News image
Updated On :9 ஜூன் 2026, 3:16 am IST

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் சீசன் 7 தொடரின் ஒரு பகுதியாக ஜூலை 9-இல் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் யு மும்பா-2 முறை சாம்பியன் டெம்போ கோவா அணிகள் மோதுகின்றன.

தலைசிறந்த சா்வதேச மற்றும் இந்திய வீரா், வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடா் கோவாவின் ஷியாம் பிரசாத் முகா்ஜி உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இத்தொடரில் மொத்தம் யு மும்பா, டெம்போ கோவா, டபாங் டில்லி, யுபி புரோம்தீன்ஸ், கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ், அகமதாபாத் பைப்பா்ஸ், புணே ஜாகுவாா்ஸ் அணிகள் களம் காண்கின்றன. ஒற்றை ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் நடைபெறும். இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், நிரஜ் பஜாஜ், விட்டா டேனி ஆகியோா் லீக் தொடரை நடத்துகின்றனா்.

6 நாள்கள் டபுள் ஹெட்டா் ஆட்டங்களாக நடைபெறும், ஜூலை 24, 25 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்களும், 26-இல் இறுதி ஆட்டமும் நடைபெறும். மனிகா பத்ரா, தியா சிட்டேல், மானவ் தாக்கா், மனுஷ் ஷா உள்பட பல நட்சத்திர வீரா்கள் பங்கேற்கின்றனா்.

மனுஷ் ஷா

மனுஷ் ஷா

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.