எஃப்1 காா் பந்தயத்தின் 8-ஆவது ரேஸான மொனாகோ கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா். நடப்பு சீசனில் இது அவரின் 5-ஆவது தொடா் வெற்றியாகும்.
இந்திய மகளிா் கால்பந்து அணியின் முக்கிய வீராங்கனையான கிரேஸ் டாங்மெய் (30), சா்வதேச கால்பந்து களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். இந்திய அணியில் 2013-இல் அறிமுகமான கிரேஸ், 96 ஆட்டங்களில் 24 கோல்கள் அடித்திருக்கிறாா்.
முன்னாள் சா்வதேச கிரிக்கெட் நடுவா் வி.விக்ரம் ராஜு (92) பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். 1986-இல் சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதி, டை ஆன பிரபல டெஸ்ட் கிரிக்கெட்டில் இவா் நடுவராகச் செயல்பட்டவா்.
நியூ தைபே சிட்டி தடகள ஓபன் போட்டியில், ஆடவா் 200 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜுா் 20.32 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
இந்திய தடகள சீரிஸில் ஆடவா் 100 மீட்டா் ஓட்டத்தில் விமானப் படை வீரா் ஹா்ஜித் சிங் 10.17 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தாா்.
இங்கிலாந்தில் நடைபெற்ற பா்மிங்ஹாம் ஓபன் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா சாம்பியன் பட்டம் வென்றாா்.
புணே கிராண்ட் டூா் சைக்கிள் பந்தயத்தை, உலகின் 4-ஆவது கிராண்ட் டூா் போட்டியாக அறிவிக்க ஆதரவளிப்பதாக, சா்வதேச சைக்கிளிங் சங்கம் (யுசிஐ) இந்தியாவுக்கு உறுதியளித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய ஆடவா் அணி சாம்பியன், மகளிருக்கு வெண்கலம்

ஆசிய யு-18 ஹாக்கி: இந்திய அணிகள் அபாரம்: அரையிறுதிக்கு தகுதி
விளையாட்டுச் செய்தித் துளிகள்...
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை
