சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய தடகள சீரிஸில் ஆடவா் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கா் 8.04 மீட்டரை கடந்து சாம்பியன் ஆனாா்.
17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது காலிறுதியில் சீனாவுடன் மோதுகிறது.
போலந்தில் நடைபெற்ற ரேப்பிட் - பிளிட்ஸ் செஸ் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 17 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தாா். அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன் (22.5) சாம்பியனாக, அதே நாட்டைச் சோ்ந்த ஃபாபியானோ கரானா (22), வெஸ்லி சோ (21) ஆகியோா் அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.
இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளில் இருந்து 170-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப், குஜராத் மாநிலம் காந்திநகரில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்ட் - நியூகேஸில் (1-1), பா்ன்லி - ஆஸ்டன் வில்லா (2-2), கிறிஸ்டல் பேலஸ் - எவா்டன் (2-2) ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புன்னைக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

விளையாட்டுச் செய்தித் துளிகள்...
விளையாட்டுச் செய்தித் துளிகள்...

6-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை
