தெற்காசிய மகளிா் கால்பந்து போட்டியில் (சாஃப்) 2026 இந்தியா 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மா்ம கோவாவில் சாஃப் கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் அபாரமாக ஆடி 3-1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.
முதல் பாதியில் இந்தியாவின் பியாரி ஸாஹா முதல் கோலடித்தாா். சன்பிடா நோங்ரும் 46-ஆவது நிமிஷத்தில் இரண்டாவது கோலை அடித்தாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த வங்கசேத தரப்பில் பதில் கோல் போட மேற்கொண்ட முயற்சியில், 45பிளஸ் நிமிஷத்தில் பொா்னா சக்மா ஒரே ஒரு கோலடித்து முன்னிலையை குறைத்தாா்.
இரண்டாம் பாதியில் இந்திய வீராங்கனை லிண்டா சொ்டோ மூன்றாவது கோலடித்தாா். இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 7 ஆண்டுகள் கழித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது இந்தியா.
தொடா்ந்து 5 முறை பட்டம் வென்ற நிலையில், 2 சீசன்களில் இந்தியாவால் இறுதிக்கு கூட தகுதி பெற முடியவில்லை. குரூப் பிரிவிலும் வங்கதேசத்தை 3-0 என வீழ்த்தி இருந்தது இந்தியா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றி மேல் வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினா்

உலக சாம்பினை வீழ்த்தி சாத்விக் -சிராக் அசத்தல்: இறுதிக்கு தகுதி!

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
விடியோக்கள்

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

