இந்தியன் சூப்பர் லீக்கில் நடைபெற்ற இனவெறி தாக்குதலுக்கு இந்திய கால்பந்து சம்மேளனம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கேரள பிளாஸ்டர்ஸ் அணியினைச் சேர்ந்த வீரருக்கு பெங்களூரு எப்ஃசி அணியின் ரசிகர்கள் இனவெறியைத் தூண்டும் வசனங்களை முழக்கமிட்டனர். இது குறித்து சமூக வலைதளத்தில் மிகுந்த கால்பந்து ரசிகர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியன் சூப்பர் லீக்கில் ஏப்.11ஆம் தேதி கண்டீரவா விளையாட்டுத் திடலில் கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் பெங்களூரு எப்ஃசி அணியும் மோதின. இந்தப் போட்டியில் கேரள அணி 2-1 என வென்றது.
கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்கு விளையாடும் செனகல் நாட்டைச் சேர்ந்த டிஃபெண்டர் ஃபாலூ நதியாய் விளையாடும்போது, பெங்களூரு ரசிகர்கள் இனவெறியைத் தூண்டும் வசனங்களை முழக்கமிட்டனர்.
இது குறித்த தனது புகாரை கேரள அணி இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு அனுப்பினர். இது குறித்த தனது கண்டத்தை சம்மேளனமும் வெளியிட்டுள்ளது. பெங்களூரு அணியும் இது எந்த வகையில் ஏற்கத்தக்கதல்ல என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நட்பு ரீதியான போட்டியில் மொராகோ மற்றும் ஸ்பெயின் நாட்டுக்கான விளையாடின்போது நடந்த இனவெறி ரீதியான தாக்குதலுக்கு இளம் நட்சத்திர வீரர் லாமின் யமால் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
இனவெறி காரணமான ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியருக்கு பேலந்தோர் விருது புறக்கணிக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் அவர் மீது நிகழ்த்தப்பட்ட இனவெறி தாக்குதலுக்காக பென்ஃபிகா வீரருக்கு தடை விதிக்கப்பட்டதும் சர்வதேச அளவில் பேசுபொருளானது.
Summary
AIFF refers complaints of alleged racial abuse against players in ISL to Disciplinary Committee.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சௌதி புரோ லீக்கில் 100ஆவது கோல் அடித்த ரொனால்டோ..! முதல் கோப்பை வெல்வாரா?

2 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்!

பிஎஸ்எல் தொடரில் பந்தைச் சேதப்படுத்திய ஃபஹர் ஸமான்..! 5 ரன்கள் பெனால்டி!

பிஎஸ்எல் தொடரில் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய வெள்ளைப் பந்து..! பாகிஸ்தானுக்கு அவமானம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


