லா லிகா கால்பந்துத் தொடரில் பார்சிலோனா அணி தனது சொந்த திடலனா ‘கேம்ப் நௌ’வில் விளையாடியது. இந்தப் போட்டியில் லாமின் யமால் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
கடந்த வாரம் சாம்பியன்ஸ் லீக்கில் மோசமாக விளையாடிய பார்சிலோனா அணி லா லிகா தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களுக்கு ஆறுதல்களை அளித்துள்ளது.
கேம்ப் நௌ திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4-1 என பார்சிலோனா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஃபெர்ரன் டோரஸ் 9, 25ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார். 87, 89ஆவது நிமிஷங்களில் லாமின் யமால், ராஷ்போர்டு கோல் அடித்தார்கள்.
எஸ்பானியோல் அணி சார்பாக 56ஆவது நிமிஷத்தில் லொஜானோ ஆறுதல் கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில் பார்சிலோனா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட், 1 கோல் அடித்த லாமின் யமால் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சாம்பியன்ஸ் லீக்கின் இரண்டாவது கட்ட போட்டியில் அத்லெடிகோவை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
Barcelona's Stunning Victory: Top Spot by a 9-Point Margin!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!

பார்சிலோனாவை 20 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற அத்லெடிகோ: தோல்வியிலும் கவனம் ஈர்த்த லாமின் யமால்!

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

நான் முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ்... ஸ்பெயின் ரசிகர்களின் இஸ்லாமிய வெறுப்புக்குப் பதிலளித்த லாமின் யமால்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

