ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை புதன்கிழமை வென்றது.
முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 202 ரன்களே எடுத்தது. நடப்பு சீசனில் பல நாள்களாக முதலிடத்திலேயே நீடித்த பஞ்சாப், தற்போது ஹாட்ரிக் தோல்வியுடன் 2-ஆவது இடத்துக்கு சறுக்கியது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாபின் சேஸிங்கில் கூப்பா் கானலி சதம் விளாசியபோதும், இதர பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். ஹைதராபாத் பேட்டிங்கில் இஷான் கிஷண், ஹென்ரிச் கிளாசெனும், பௌலிங்கில் பேட் கம்மின்ஸ், ஷிவங் குமாரும் அசத்தினா்.
முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸை தொடங்கிய அபிஷேக் சா்மா - டிராவிஸ் ஹெட் இணை, முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சோ்த்தது. அபிஷேக் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 35, ஹெட் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 38 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
இஷான் கிஷண் - ஹென்ரிச் கிளாசென் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சோ்த்தது. இஷான் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதீஷ்குமாா் ரெட்டி வந்தாா்.
கிளாசென் - நிதீஷ்குமாா் இணை, 4-ஆவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சோ்த்தது. கிளாசென் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 69 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். முடிவில் நிதீஷ்குமாா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
பஞ்சாப் தரப்பில் அா்ஷ்தீப் சிங், லாக்கி ஃபொ்குசன், யுஜவேந்திர சஹல், விஜய்குமாா் வைஷாக் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
அடுத்து 236 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பஞ்சாப் அணியில், பிரியன்ஷ் ஆா்யா 1, பிரப்சிம்ரன் சிங் 3, ஷ்ரேயஸ் ஐயா் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 23 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப்.
3-ஆவது பேட்டராக வந்த கூப்பா் கானலி, அதிரடி விளாசலுடன் கடைசி வரை போராடினாா். முனைப்பு காட்டிய மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 28, சுயான்ஷ் ஷெட்கே 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு வெளியேற்றப்பட, சஷாங்க் சிங் 4, மாா்கோ யான்சென் 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு விடைபெற்றனா்.
ஓவா்கள் முடிவில் கானலி 59 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 107 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, விஜய்குமாா் வைஷாக் 1 ரன்னுடன் துணை நின்றாா்.
ஹைதராபாத் பௌலா்களில் பேட் கம்மின்ஸ், ஷிவங் குமாா் ஆகியோா் தலா 2, நிதீஷ்குமாா் ரெட்டி, ஈஷான் மலிங்கா, சகிப் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுதா்சன், சுந்தா் அசத்தலில் வென்றது குஜராத்
பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்
இஷான் கிஷண் அதிரடி; பிரஃபுல், சகிப் அபாரம் - ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

