தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 50ஆவது ஆண்டு..! முதல் போட்டியில் தமிழக வீராங்கனை கேப்டன்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டம் குறித்து...

50th year of Indian women’s cricket.

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 50ஆம் ஆண்டு - படம்: எக்ஸ் / பிசிசிஐ விமன்

Published On :31 அக்டோபர் 2026, 11:31 am IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனைக் கொண்டாடும் விதமாக பிசிசிஐ விமன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

முதன்முதலாக இந்திய மகளிரணி டெஸ்ட் போட்டியில் பெங்களூரில் சின்னசாமி கிரிக்கெட் திடலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 1976ஆம் ஆண்டு அக்.31ஆம் தேதி விளையாடியது.

இந்த முதல் போட்டிக்கு கேப்டனாக சென்னையைச் சேர்ந்த சாந்தா ரங்கசாமி பொறுப்பேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஷுபாங்கி குல்கர்னி முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த டெஸ்ட் போட்டி நவ.2ஆம் தேதி வரை நடைபெற்று சமனில் முடிவடைந்தது. மொத்தமாக 6 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டி சமனில் முடிந்தன. நான்காவது போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியைப் பெற்றது.

ஐந்தாவது போட்டி மீண்டும் சமனில் முடிய, கடைசி போட்டியில் இந்தியா தோல்வியுற்றது. ஆக, முதல் தொடரே 1-1 என சமனில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, மகளிர் கிரிக்கெட் அதிகளவு பிரபலமாகியுள்ளது. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக ஊதியமும் வழங்கப்படுகிறது. அவர்களது போட்டிக்கும் வணிக ரீதியான முக்கியத்துவம் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் குறைவாக விளையாடினாலும் டி20 போட்டிகள் அதிகமாக விளையாடப்படுகின்றன. இந்திய மகளிரணி சமீபத்தில் 2025ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.

ஆசிய கோப்பையில் இதுவரை 8 முறை 2004, 2005-06, 2006, 2008, 2012, 2016, 2018, 2022) சாம்பியனாகியிருக்கிறது. ஆசிய விளையாட்டிலும் தங்கம் வென்றுள்ளன. ஆனால், இதுவரை டி20 உலகக் கோப்பையை வெல்லாமல் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

தற்போது, இந்திய மகளிரணிக்கு ஸ்மிருதி மந்தனா அனைத்து வடிவலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். விரைவில் டி20 உலகக் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.

Summary

50th year of Indian women’s cricket..! A player from Tamil Nadu to captain the first match!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.