மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மகளிர் பிரீமியர் லீக்: ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் வீராங்கனை..! யார் இந்த கிரண் நவ்கிரே?

மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் வீராங்கனை குறித்து...

Kiran Navgire

வீராங்கனை கிரண் நவ்கிரே - படம்: எக்ஸ் / மகளிர் பிரீமியர் லீக்

Published On :28 அக்டோபர் 2026, 7:31 pm IST

மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் வீராங்கனையாக கிரண் நவ்கிரே ரூ. 75 லட்சத்தில் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முன்பாக வீராங்கனைகளுக்கான ஏலம் கொச்சியில் இன்று (அக்டோபர் 28) தொடங்கியது.

மகளிர் பிரீமியர் லீக் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் முதல் வீராங்கனையாக கிரண் நவ்கிரே ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியினால் எடுக்கப்பட்டுள்ளார்.

அதிரடி பேட்டரான இவரை ஏலத்தில் எடுக்க மும்பை அணிக்கும் தில்லி அணிக்கும் போட்டி இருந்தது. ரூ.40 லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில் ரூ.75 லட்சத்தில் தில்லி அணி வாங்கியது.

இன்றைய நாளில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய கேப்டன் சோஃபி மோலினியூக்ஸ் ரூ. 1.10 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கிரண் நவ்கிரே?

மகாராஷ்டிரத்தில் பிறந்த இவர் நாகாலாந்து அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். முன்னதாக யுபி வாரியர்ஸ் அணியில் இருந்து தற்போது தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

இவர் அபிஷேக் பச்சனின் கூமர் என்ற திரைப்படத்தில் பயிற்சியாளராக நடித்துள்ளார். 32 வயதான இவர் மகளிர் சீனியர் டி20 கோப்பையில் அதிகபட்ச ரன்கள் குவித்தவராக சாதனை படைத்தார்.

மகளிர் பிரீமியர் லீக்கில் சோபிக்காத இவருக்கு இந்தமுறை நம்பிக்கையுடன் தில்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் முதல் வீராங்கனையாக எடுத்துள்ளது.

Summary

Kiran Navgire goes to Delhi Capitals for INR 75 Lakh! She becomes the first player to be sold in TATA WPL Auction 2027

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.