மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக (3-0) வென்றது இந்திய மகளிரணி!

இந்திய மகளிரணி 3-0 என ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது குறித்து...

Vaishnavi and Pratheeka Raval, winners of the Player of the Match and Player of the Series awards

ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருது வென்ற வைஷ்ணவி மற்றும் பிரதீகா ராவல் - படங்கள்: பிசிசிஐ விமன்ஸ்

Published On :28 அக்டோபர் 2026, 9:16 pm IST

இந்திய மகளிரணி 3-0 என ஜிம்பாப்வே மகளிரணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை முழுமையாக வென்றுள்ளது. தொடர் நாயகியாக பிரதீகா ராவல் தேர்வாகியுள்ளார்.

ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்கள். இதில் 3-0 என டி20 தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் 2-0 என இருந்தனர்.

கடைசி ஒருநாள் போட்டி இன்று குஜராத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக அந்த அணியில் மோடெஸ்டர் முபாச்சிக்வா 37 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 17 ஓவர்களில் 133/2 ரன்கள் எடுத்து வென்றது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 59*, ஷெஃபாலி வர்மா 51* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இத்துடன் ஒருநாள் தொடரிலும் 3-0 என முழுமையாக வென்றனர். ஆட்ட நாயகியாக வைஷ்ணவி சர்மா, தொடர் நாயகியாக பிரதீகா ராவல் தேர்வாகியுள்ளார்கள்.

Summary

India Women won by 8 wkts, 3-0 won against zimbabwe women

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.