மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியூசி.க்கு எதிரான தொடரை வெல்லுமா இந்தியா? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளதைப் பற்றி...

மிட்செல் சாண்டனர் - ஷ்ரேயஸ் ஐயர்.

Published On :27 அக்டோபர் 2026, 12:18 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளும் மோதிய முதலிரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி வெல்லிங்டனில் இன்று (அக். 27) நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். கடந்த ஆட்டத்தில் இருந்த பிலேயிங் லெவனுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

முதலிரண்டு போட்டிகளிலும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய புவனேஷ்வர் குமார் மற்றும் பேட்டிங் சொதப்பிய இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

அதேநேரத்தில் நியூசிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் மற்றும் நாதன் ஸ்மித் ஆகியோர் வெளியேற்றப்பட்டு, மேத்யூ ஃபிஷர், கைல் ஜேமிசன் மற்றும் ஆடம் மில்னே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.

டிம் செய்ஃப்ர்ட்(விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர்.

Summary

India have won the toss and opted to bowl. It's a hat-trick of toss wins for Shreyas Iyer. India are unchanged. And the Indian players are out with their gloves in windy Wellington.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.