தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல் டி20: சஞ்சு சாம்சன் அரைசதம்; நியூசி.யை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sanju Samson celebrates after scoring a half-century

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ

Published On :22 அக்டோபர் 2026, 5:07 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கிளன் பிலிப்ஸ் 40 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஃபின் ஆலன் 45 ரன்கள், பெவான் ஜேக்கப்ஸ் 31 ரன்கள், டேரில் மிட்செல் 28 ரன்கள், டிம் செய்ஃபெர்ட் 24 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சஞ்சு சாம்சன், நமன் திர் அதிரடி!

226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 33 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நமன் திர் 15 பந்துகளில் 42* ரன்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 பந்துகளில் 42 ரன்களும் (ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) எடுத்தனர். அபிஷேக் சர்மா 29 ரன்கள், அக்‌ஷர் படேல் 24 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே மற்றும் லாக்கி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

India won the first T20I against New Zealand by 4 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.