மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடைசி டி20: ஹர்மன்பிரீத் கௌர், ஷஃபாலி வர்மா அதிரடி; ஜிம்பாப்வேவுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.

ஹர்மன்பிரீத் கௌர் - படம் : பிசிசிஐ

Published On :20 அக்டோபர் 2026, 9:56 pm IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ராய்பூரில் இன்று (அக்டோபர் 20) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஹர்மன்பிரீத் கௌர், ஷஃபாலி வர்மா அதிரடி!

டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ஷஃபாலி வர்மா அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய ஹர்மன்பிரீத் கௌர் 41 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஷஃபாலி வர்மா 37 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அனுஷ்கா சர்மா 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் பிலௌட் பிஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிபாண்டா, டெண்டாய் மகுசா மற்றும் நியாஷா குவான்ஷுரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the last T20I against Zimbabwe, the Indian team scored 216 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.