மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘இந்திய அணியில் என் கடமை முடிந்துவிட்டது’ - ஹர்மன்ப்ரீத் கௌர் உருக்கமான பதிவு!

என்னுடைய கடமையை முடிந்துவிட்டது என்று உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் உருக்கமான பதிவு..

ஹர்மன்ப்ரீத் கௌர் - ஸ்மிருதி மந்தனா.

Published On :6 அக்டோபர் 2026, 12:35 pm IST

என்னுடைய கடமையை முடிந்துவிட்டது என்று ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கௌர், இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இன்று, நான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களுக்குமான கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்.

இது வெறும் சாதாரண முடிவு அல்ல; பல ஆண்டுகால நினைவுகளும், உணர்ச்சிகளும், தியாகங்களும், என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் அடங்கியுள்ளன.

அணிக்காக விளையாட வேண்டும் என்று என்னுடைய தனிப்பட்டவற்றையும் ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. ஒரு கேப்டனாக சில கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன்.

கடினமான தருணங்களையும், மனவேதனைகளையும், விமர்சனங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, வெற்றிகள், கொண்டாட்டங்கள் என வாழ்க்கையின் மாறுபட்ட தருணங்களையும் அனுபவித்திருக்கிறேன்.

இன்று கேப்டன் பதவியிலிருந்து உணர்ச்சிகள் நிறைந்த மனதுடன் விடைபெறுகிறேன். நான் என் கடமையைச் செய்துவிட்டதாக உணர்கிறேன். இந்திய மகளிரணிக்கு கேப்டனாக இருந்ததற்கு என்றென்றும் நன்றியுடையவளாக இருப்பேன். இப்போது நான் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கேப்டன் பதவி இன்றுடன் முடிவடையலாம், ஆனால் இந்திய கிரிக்கெட் மீதான என் அன்பு ஒருபோதும் முடிவடையாது. என்னுடைய ஒவ்வொரு சக வீரருக்கும், பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள், நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இன்ப துன்பங்களில் எனக்குத் துணையாக நின்ற ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விளையாட்டுக்காக ரத்தம், வியர்வை, தியாகம், பெருமை எல்லாவற்றையும் கொடுத்தேன். இப்போது, ​​கிரிக்கெட் மீதான காதலுக்காக மீண்டும் விளையாட நான் தயாராகிவிட்டேன். கேப்டன் பதவி முடிவடைகிறது. கிரிக்கெட் பயணம் தொடரும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

World Cup-winning captain Harmanpreet Kaur has decided to step down from her role as the skipper of the Indian women's cricket team on Tuesday, October 6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.