கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி குறித்து...

News image

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் கேப்டன்கள் ஒருநாள் கோப்பை அறிமுகத்தின்போது... - படம்: ஏபி

Updated On :31 மே 2026, 12:17 pm IST

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று மாலை தொடங்கி நேற்றிரவு முடிவடைந்தது. இதில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக மாட் ரென்ஷா 61, மேத்யூ ஷார்ட் 55 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்களில் 202/5 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக பாபர் அசாம் 69, காசி கோரி 65 ரன்கள் எடுத்தார்கள்.

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தானின் அறிமுக வீரர் அராஃபத் மின்ஹாஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி ஜூன் 2ஆம் தேதி லாகூரில் நடைபெற இருக்கிறது.

Summary

Pakistan won by 5 wkts against australia in First ODI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.