பஞ்சாப் கிங்ஸ் வீரர் கூப்பர் கானலி ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதிலேயே சதம் அடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நேற்றிரவு ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 235/4 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 202/7 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் தனியாளாகப் போராடிய பஞ்சாப் கிக்ஸ் வீரர் கூப்பர் கானலி தனது முதல் ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய கானலி 59 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார்.
இதுவரை விளையாடிய வெளிநாட்டினர்களில் ஐபிஎல் போட்டிகளில் குறைந்த வயதில் சதமடித்தவராக கூப்பர் கானலி சாதனை படைத்துள்ளார். முன்னதாக, டி காக 2016ல் தனது 23ஆவடு வயதில் சதமடித்திருந்தார்.
குறைந்த வயதில் சதமடித்த வெளிநாட்டவர்கள்
22 ஆண்டுகள் 257 நாள்கள் - கூப்பர் கானலி (2026)
23 ஆண்டுகள் 122 நாள்கள் - டி காக் (2016)
23 ஆண்டுகள் 153 நாள்கள் - டேவிட் வார்னர் ( 2010)
23 ஆண்டுகள் 330 நாள்கள் - டேவிட் மில்லர் (2013)
23 ஆண்டுகள் 352 நாள்கள் - கேமரூன் கிரீன் (2023)
Summary
Cooper Connolly sets a record as Youngest overseas batter to score a century in IPL
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

கூப்பர் கானலி முதல் சதம்..! ஆறுதல் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

ஐபிஎல் 2026: வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு!

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

