பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்த வேகப் பந்துவீச்சாளர் ஹுனைன் ஷா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
எலிமினேட்டர் 2 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 186/5 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் 20 ஓவர்களில் 184/7 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், ஹுனைன் ஷா மிகச் சிறப்பாக பந்துவீசி 3 ரன்கள், 1விக்கெட் எடுத்து அசத்தினார்.
முதல் 3 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்திருந்த அவர், கடைசி ஓவரில் 6 பந்துகளுமே யார்க்கர் பந்துகளாக வீசி, ஆட்ட நாயகன் விருதுக்கு தகுதியானவராக மாறினார்.
இந்த ஹுனைன் ஷா (22 வயது) யார் என்றால், நட்சத்திர பாகிஸ்தான் வீரர் நஷீம் ஷாவின் (23 வயது) தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணனைப் போலவே பந்துவீசும் ஸ்டைல் கொண்ட இவர் ஒரே நாளில் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.
இவரது ஓவர் குறித்து லபுஷேன், “6 பந்துகளுமே யார்க்கர் வீசி இருக்கிறார். என்ன சொல்வது? விவரிக்க வார்த்தைகளே இல்லை” எனக் கூறியுள்ளார்.
வெற்றிக்குப் பிறகு ஹைதராபாத் வீரர்கள் களத்தில் துள்ளிக்குதிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Summary
Hunain Shah defends six off final over as Hyderabad reach PSL final
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!

அறிமுக சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத்..! ஆனந்தக் கண்ணீரில் லபுஷேன்!

338% சம்பள உயர்வு..! கிளாசனின் வாழ்க்கையை மாற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

நினைத்தது நடந்தது..! ஆட்ட நாயகன் விருது வென்ற அறிமுக வீரர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


