அறிமுக வீரர் பிரஃபுல் ஹிங்கே ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
ஐபிஎல் லீக் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல் அணிகள் நேற்றிரவு ஹைதராபாத் திடலில் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவிக்க, தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஹைதராபாத் அணிக்காக நேற்று களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஃபுல் ஹிங்கே, முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். மொத்தமாக 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஆட்ட நாயகன் விருது வென்றதும் பேசியிருப்பதாவது:
நான் இதுபோல நடக்க வேண்டுமென நினைத்தேன். கடந்தாண்டு இதை எழுதி வைத்தேன். நான் எங்கு முதல் போட்டியில் விளையாடினாலும் நிச்சயமாக 4 அல்லது 5 விக்கெட்டுகளை எடுப்பேன். பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைத்தேன்.
வெளிப்பாடு (manifestation) மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது; ஆனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
13 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். அப்போதே கிளப்பில் சேர தந்தையைக் கேட்க, அவர் மறுத்துவிட்டார். பின்னர் எப்படியோ சேர்ந்துவிட்டேன். அப்போதிருந்து விளையாடி வருகிறேன். தற்போது இந்த இடத்தில் நிற்பது மகிழ்ச்சி. எனது குடும்பத்துக்கு இந்த விருதினை சமர்ப்பிகிறேன்.
சூர்யவன்ஷியை முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்வேன் எனக் கூறியிருந்தேன். பயிற்சியாளர் வருண் அண்ணா மிகவும் உதவினார். காயத்தின்போது எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றார்.
Summary
Praful Hinge power of manifestation srh debutant interview after the man of the match award.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!

இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு..! ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

ஒரு நாளைக்கு 100 - 150 சிக்ஸர்கள்; ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் பேசிய முகுல் சௌதரி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

