மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!

ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆதரவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் பேசியுள்ளார்.

News image

ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர்

Updated On :27 மார்ச் 2026, 9:21 pm IST

ஐபிஎல் தொடரில் உள்ள இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆதரவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இம்பாக்ட் வீரர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி, ஒரு அணி பிளேயிங் லெவனில் உள்ள எந்த ஒரு வீரருக்குப் பதிலாகவும் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட 5 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் எந்த நேரத்திலும் களமிறக்கலாம்.

இந்த இம்பாக்ட் வீரர் விதிக்கு எதிராக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் பேசியுள்ளனர். இம்பாக்ட் வீரர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதற்கு இடையூறாக இருக்கும் என ரோஹித் சர்மா விமர்சித்திருந்தார். அண்மையில், இம்பாக்ட் வீரர் விதி தனிப்பட்ட முறையில் ஒரு ஆல்ரவுண்டராக தனக்குப் பிடிக்கவில்லை என அக்‌ஷர் படேலும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆதரவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இம்பாக்ட் வீரர் விதி நல்ல புதுமையான விஷயம் என நான் நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரர் விதி இடம்பெற்றிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. இம்பாக்ட் வீரர் விதியில் எது சரி, எது தவறு என பலரும் விவாதம் செய்கின்றனர். ஆனால், ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரர் விதியை போட்டியை சுவாரசியமாக்கும் புதுமையான ஒன்றாகவே நான் கருதுகிறேன் என்றார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை நாளை (மார்ச் 28) சின்னசாமி திடலில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Summary

The head coach of Royal Challengers Bangalore has spoken out in support of Impact player rule in the IPL series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.