மும்பை இந்தியன்ஸில் இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குர் பேட்டிங்கும் செய்யாமல் பந்தும் வீசாமல் வித்தியாசமான சாதனை படைத்துள்ளார்.
வான்கடேவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 243/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 18. 4 ஓவர்களில் 249/4 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை பந்துவீசும்போது ஷர்துல் தாக்குர் இம்பாக்ட் வீரராக ராபின் மின்ஸுக்குப் பதிலாக 8ஆவது ஓவரில் களமிறக்கப்பட்டார்.
மும்பை அணி முதல் போட்டியில் வெல்ல முக்கியமான காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருது வென்ற ஷர்துல் தாக்குருக்கு ஒரு பந்துகூட வீச வாய்ப்பு வழங்கவில்லை என்பது ஆச்சரியமளித்தது.
பந்துவீசவில்லை எனில் அவரை ஏன் இம்பாக்ட் வீரராக களமிறக்க வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஹார்திக் பாண்டியா மீது மும்பை ரசிகர்கள் மிகுந்த கோப்பத்தில் இருக்கிறார்கள். ஐபிஎல் வரலாற்றிலேயே இப்படி நடக்கவில்லை எனக் கூறுகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. மீதமிருக்கும் 6 போட்டிகளில் வென்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப்ஸ் செல்லும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Summary
Shardul Thakur's Unique Record After Being Brought In as an Impact Player! Mumbai Fans Outraged!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!
’லார்ட் தாக்குர்’ மீம் அல்ல; அன்பு..! ஷர்துல் தாக்குர் பேட்டி!

57-0: மும்பையின் துரந்தர் ஷர்துல் தாக்குர்..! ஜாலியாக விமர்சிக்கும் மும்பை, சிஎஸ்கே ரசிகர்கள்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

