ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை மையமாகக் கொண்ட நிறுவனம் ரூ. 15, 290 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஐபிஎல் தொடர் இன்னும் நான்கு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை மையாகக் கொண்டு இயங்கும் கல் சோமானி தலைமையிலான நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கியுள்ள கல் சோமானி தலைமையிலான நிறுவனத்தில் வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ராப் வால்டன் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஹம்ப் ஃபேமிலி ஆகியோர் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க டைம்ஸ் இண்டர்நெட், ஆதித்யா பிர்லா மற்றும் மிட்டல் தலைமையிலான நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருந்த நிலையில், கல் சோமானி தலைமையிலான நிறுவனம் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணியை வாங்கியுள்ளது.
அடுத்த ஐபிஎல் சீசனிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய புதிய ஒப்பந்தம் பிசிசிஐ அனுமதியுடன் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Rajasthan Royals team has been bought by a US-based company for Rs 15,290 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ரியான் பராக் இல்லை!

தடுமாறும் ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றியை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை தடுக்குமா?

முதலிடத்துக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


