ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 14 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் 15-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
குவாஹாட்டியில் நாளை (ஏப்ரல் 10) நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் இரண்டு அணிகளும் தோல்வியை சந்திக்காததால், இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் என இரண்டு அணிகளுமே மிகவும் வலுவாக உள்ளன. பெங்களூரு அணியில் விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகின்றனர். டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா, ரோமாரியோ ஷெப்பர்டு என பேட்டிங் வரிசை ஆழமாக உள்ளது.
ஆர்சிபியின் பந்துவீச்சும் மிகவும் வலுவாக உள்ளது. ஜேக்கப் டஃபி, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ரோமோரியோ ஷெப்பர்டு, க்ருணால் பாண்டியா, சூயாஷ் சர்மா என பந்துவீச்சு வரிசையும் வலுவாக உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே வலுவாக உள்ளது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக செயல்படுகின்றனர். கேப்டன் ரியான் பராக், துருவ் ஜுரெல் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
பந்துவீச்சைப் பொருத்தவரையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நண்ட்ரே பர்கர் இருவரும் எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். சந்தீப் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் ரன்களைக் கட்டுப்படுத்தி சிறப்பாக பந்துவீசுகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Regarding the battle for the top spot in the IPL points table between the Rajasthan Royals and Royal Challengers Bangalore...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடுமாறும் ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றியை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை தடுக்குமா?

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

ஆர்சிபி பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஜோஷ் ஹேசில்வுட்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


