ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.
ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்!
முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் உள்ள முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். சஹில் பராக் (0 ரன்), கே.எல்.ராகுல் (ஒரு ரன்), நிதீஷ் ராணா (ஒரு ரன்), சமீர் ரிஸ்வி (0 ரன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (5 ரன்கள்), அக்ஷர் படேல் (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் தில்லி கேபிடல்ஸ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதன் பின், டேவிட் மில்லர் மற்றும் அபிஷேக் போரெல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை ஓரளவுக்கு அணியின் ஸ்கோரை உயர்த்தியது. டேவிட் மில்லர் 18 பந்துகளில் 19 ரன்களும் (3 பவுண்டரிகள்) , அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 30 ரன்களும் (3 பவுண்டரிகள்) எடுத்தனர். கைல் ஜேமிசன் 12 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 3.3 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் வெறும் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ராசிக் சலாம் தர், சூயாஷ் சர்மா மற்றும் க்ருணால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி!
76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
தேவ்தத் படிக்கல் 13 பந்துகளில் அதிரடியாக 34* ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். விராட் கோலி 23* ரன்களும், ஜேக்கப் பெத்தல் 20 ரன்களும் எடுத்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெறும் 6-வது வெற்றி இதுவாகும். புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
In the IPL series, Royal Challengers Bangalore secured a resounding nine-wicket victory against Delhi Capitals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது தெரியுமா?

சாதாரணமாக சாம்பியன் ஆகல, முதல் போட்டியிலிருந்து ஆதிக்கம் செலுத்தினோம்: ரஜத் படிதார்

தோனி, ரோஹித் வரிசையில் இணைந்த ரஜத் படிதார்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


