காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள சாம் கரணுக்குப் பதிலாக இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மினி ஏலத்தின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்தார். அவருக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தனர்.
இருப்பினும், காயம் காரணமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சாம் கரண் தொடரிலிந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா மாற்று வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சாம் கரணுக்குப் பதிலாக ரூ. 2 கோடிக்கு இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மாற்று வீரராக இணையவுள்ளார். இலங்கை அணிக்காக தாசுன் ஷானகா 6 டெஸ்ட், 71 ஒருநாள் மற்றும் 131 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 3350 ரன்கள் மற்றும் 86 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதாகும் தாசுன் ஷானகா கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பெற்று மூன்று போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Summary
Sri Lanka captain Dasun Shanaka has been named as a replacement for Sam Karan, who has been ruled out of the IPL due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

ரியான் பராக் ஃபார்முக்கு வருவார், வெற்றி பெற்றுத் தருவார்: விக்ரம் ரத்தோர்

சிஎஸ்கேவில் மாற்று வீரராக இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்!

ராஜஸ்தானுக்குப் பின்னடைவு.. சிஎஸ்கேவிலிருந்து சென்ற ஆல்ரவுண்டர் சாம் கரன் விலகல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


