தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராஜஸ்தானுக்குப் பின்னடைவு.. சிஎஸ்கேவிலிருந்து சென்ற ஆல்ரவுண்டர் சாம் கரன் விலகல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

சாம் கரன்.

Updated On :20 மார்ச் 2026, 12:54 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 19-வது தொடர் வருகிற 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் தொடங்குகிறது. கோலகலமாகத் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை. 14 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று, எட்டு புள்ளிகளும் 10-வது இடத்தைப் பிடித்தது. இதனால், அதிரடி பேட்டிங் வரிசையுடன் ஆறாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் தங்களுக்கான முதல் போட்டியில் பெங்களூரு அணியையும், சென்னை மண்ணில் நடைபெறும் தங்களுக்கான முதல் போட்டியில் ஏப். 4 ஆம் தேதி பஞ்சாப் அணியையும் சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சாம் கரன், தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரன், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து அணி அரையிறுதி வரை தகுதிபெற பங்களிப்பை வழங்கினார்.

இந்தத் தொடருக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் இருவரையும், ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

27 வயதான சாம் கரனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2023 ஆம் ஆண்டில் ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. மீண்டும் 2025 ஆம் ஆண்டு ரூ. 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 5 போட்டிகளில் விளையாடியிருந்த அவர் 114 ரன்களும், ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.

ராஜஸ்தான் அணியில் சாம் கரனுக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.