கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே மீதமுள்ள நிலையில், வீரர்கள் பலரும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி வருகின்றனர். சிலர் ஆரம்பக் கட்ட போட்டிகளில் மட்டும் விளையாட முடியாத சூழலில் உள்ளனர்.
காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகிய நிலையில், தற்போது காயம் காரணமாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீர் அணிக்காக ரஞ்சி கோப்பைத் தொடரில் கடைசியாக ஆகாஷ் தீப் விளையாடியிருந்தார். அதன் பின், காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. அவருக்கு இன்னும் காயம் முழுமையாக குணமாகவில்லை எனவும், அவர் குணமடைவதற்கு இன்னும் 3 மாதங்கள் தேவைப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவும் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷித் ராணா, மதீஷா பதிரானா மற்றும் ஆகாஷ் தீப் இல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ள ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Kolkata Knight Riders fast bowler Akash Deep is expected to miss the IPL due to a knee injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வேகப் பந்துவீச்சாளர்!

19 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?

ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக கேகேஆர் அணியில் இணைந்த மாற்று வீரர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


