ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ரிங்கு சிங் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. வருகிற மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிங்கு சிங் எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங், வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்குப் பிறகு, ஐபிஎல் தொடரிலும் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ரிங்கு சிங் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங்குக்கு எந்த அளவுக்கு போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மிகவும் அபாரமாக விளையாடினார். அந்த சீசனில் 150-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் 400-450 ரன்கள் குவித்தார். ஆனால், அதன் பிறகு அவர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
அதன் பின், அவருக்கு போதுமான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அதனால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு அதிக ரன்கள் குவிக்க வேண்டும். டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவரால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ரிங்கு சிங்குவின் ஃபார்ம் கொல்கத்தா அணிக்கு ஒரு பிரச்னையாக மாறியுள்ளது என்றார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வருகிற மார்ச் 29 ஆம் தேதி விளையாடும் அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Summary
Former India player Irfan Pathan has said that Rinku Singh will have to make the most of the opportunities he gets in the IPL.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டத்தின் போக்கை மாற்றிய 4 சிக்ஸர்கள்... ரிங்கு சிங்குக்கு இர்பான் பதான் பாராட்டு!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!

கே.எல்.ராகுல் சிறந்த வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை: இர்பான் பதான்

வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக எதிரணிகளிடம் திட்டங்கள் இருக்கும்: இர்பான் பதான்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


