ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான 38-ஆவது ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டதில் கொல்கத்தா 2 விக்கெட் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது.
கொல்கத்தா தரப்பில் கேப்டன் ரஹானே - டிம் சைபெர்ட் களமிறங்கினர். ரஹானே 10 ரன்களுக்கும், சைபெர்ட் ரன் ஏதுமின்றியும் மோஷின் கான் பந்தில் அவுட்டாகினர்.
ரிங்கு சிங் அபாரம் 83: மறுமுனையில் அபாரமாக ஆடிய ரிங்கு சிங் 5 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 87 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். திக்வேஷ் ரதி வீசிய கடைசி 20-ஆவது ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசினார் ரிங்கு சிங்.
கொல்கத்தா 155/7: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155/7 ரன்களைச் சேர்த்தது கொல்கத்தா,. மோஷின் கான் அசத்தல் 5 விக்கெட்: பெüலிங்கில் லக்னௌ தரப்பில் அசத்தலாக பந்துவீசிய மோஷின் கான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் தரப்பில் எய்டன் மார்க்ரம்-மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மார்க்ரம் 31, மார்ஷ் 2 என அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். கேப்டன் ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 42 ரன்களை எடுத்து அவுட்டானார்.
கடைசிப் பந்தில் சிக்ஸர்: ஒரு பந்தில் 7 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் முகமது சமி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால். இதனால் இரு அணிகளின் ஸ்கோர் சமநிலையை அடைந்தது.
லக்னௌ 155/8: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 155/8 ரன்களை சேர்த்தது.
சூப்பர் ஓவர்: இரு அணிகளும் சமமான ஸ்கோரை பெற்றதால் ஆட்டம் டையில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பூரண், மார்க்ரம் அவுட்டானார்கள். 1 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஆடிய கொல்கத்தா அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தில் பவுண்டரி விளாசினார் ரிங்கு சிங். இதன் மூலம் சூப்பர் ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ரிங்கு சிங் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி!

லக்னௌவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
