முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு பதிலடி கொடுத்த இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பேட்டி சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது கௌதம் கம்பீர் சிரிப்பைப் பார்க்க நன்றாக இருப்பதாக தோனி தனது வாழ்த்துப் பதிவில் கூறியிருந்தார்.
அகமதாபாத் திடலில், கடந்த மார்க் 8ஆம் தேதி நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்தப் போட்டியைக் காண நேரில் சென்றிருந்த தோனி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “ பயிற்சியாளர் சஹாப், சிரிப்பது உங்களுக்கு நன்றாக இருக்கிறது. ஊக்கம் மிகுதியுடன் சிரிப்பும் சேரும்போது மிகவும் பயங்கரமான இணையாக மாறிவிடுகிறது. சிறப்பாக செயல்பட்டீர்கள்” எனக் கூறியிருந்தார்.
கௌதம் கம்பீர் இந்தப் பதிவில், “உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி, சிரிப்பதற்கு என்ன ஒரு சிறப்பான காரணம்” எனப் பதிலளித்திருந்தார்.
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28ல் நடைபெற இருக்கிறது. 44 வயதில் தோனியின் விளையாட்டைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கௌதம் கம்பீர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க தோனி வந்திருந்தது நன்றாக இருந்தது. என்னை சிரிக்க சொல்லியிருந்ததும் நன்றாக இருந்தது.
ஒருநாள் அவரும் என்னுடைய இடத்தில் இருப்பார். அப்போது நானும் அவரைப் போலவே சிரிக்கச் சொல்லி எழுதுவேன். அவரும் டகவுட்டில் இருந்து சிரிப்பார் எனக் கூறியுள்ளார்.
Gautam Gambhir Opens Up On Viral MS Dhoni Exchange, Sends Him Big Message: "Be In My Position"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தோனிக்கு இடமிருக்கிறதா?

தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை; பிரெவிஸ் பங்கேற்க வாய்ப்பு!

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


