இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனின் திறமை மீது ஒருபோதும் எந்தவொரு சந்தேகமும் இல்லை என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார் சஞ்சு சாம்சன். முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பவர்பிளேவிலேயே எதிரணியின் கைகளிலிருந்து ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக கொண்டு வரும் திறமை படைத்தவர் சஞ்சு சாம்சன் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: சஞ்சு சாம்சனால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். அவரது திறமை மீது ஒருபோதும் எந்தவொரு சந்தேகமும் இருந்ததில்லை. அவர் அதிரடியாக விளையாடினால், அவரால் ஆட்டத்தின் முதல் 6 ஓவரிலேயே போட்டியை வென்று கொடுக்க முடியும்.
உடற்பயிற்சி கூடத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக பயிற்சி மேற்கொள்வோம். அப்போது, ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்பதை சஞ்சு சாம்சனிடம் கூறினேன். எங்களுக்கு இடையேயான உரையாடல் இவ்வாறுதான் இருக்கும்.
டாப் ஆர்டரில் மூன்று இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து நிறைய விமர்சனங்கள் இருந்தது எனக்குத் தெரியும். ஆனால், டாப் ஆர்டரில் மூன்று இடதுகை பேட்டர்கள் இருப்பதால் அணியில் மாற்றம் செய்யவில்லை. அதிரடியாக விளையாடக் கூடிய பார்ட்னர்ஷிப் அமையவேண்டும் என்பதற்காகவே டாப் ஆர்டரில் மாற்றம் செய்தோம். முதல் 6 ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதற்காகவே சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார் என்றார்.
அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் சஞ்சு சாம்சன் 97* ரன்கள், 89 ரன்கள் மற்றும் 89 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Head coach Gautam Gambhir has said that there is never any doubt about the talent of Indian opener Sanju Samson.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து மகளிரணி அறிவிப்பு!

சஞ்சு சாம்சன் கடவுளுக்குப் பிடித்தமான குழந்தை..! சிராஜ் புகழாரம்!

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

