இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தலைமைப் பயிற்சியாளருமான கௌதம் கம்பீர், அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மிகவும் அதிருப்தி அடைந்ததாக இந்திய அணியின் தேர்வுக்குழு முன்னாள் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது. இருதரப்பு போட்டிகளில் பல்வேறு தோல்விகளை இந்திய அணி சந்தித்திருந்தாலும், கடந்த ஒராண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தி வருகிறது.
ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் இதுவரை இறுதிப்போட்டிகளில் தோல்வியே தழுவாத கம்பீர், 2027 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
2006 முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக அனைத்து விதமான போட்டிகளில் விளையாடிய கௌதம் கம்பீர், 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைகளில் சாம்பியன் பட்டம் வெல்லுவதற்கு முக்கிய பங்களிப்பை அளித்தார். இருப்பினும், 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந்த நிலையில், முதல்முறையாக இந்திய அணிக்கு 1983 ஆம் ஆண்டில் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவரும், இந்திய அணியின் தேர்வுக்குழு முன்னாள் தலைவருமான சந்தீப் பாட்டீல் விக்கி லால்வானியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அதில், கௌதம் கம்பீர் பற்றியும் பேசினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் பலர் மீதும் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். ஆனால், கௌதம் கம்பீர் மட்டும் அதை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் தேர்வுக்குழுவின் தலைவராக இருக்கும் மிகப் பெரிய முடிவுகளையும் எடுக்கத் தயங்கக்கூடாது.
தலைவராக இருந்தாலும், வீரர்களுடனான நட்பை நட்பாகப் பார்க்கவில்லை. சச்சின் டெண்டுல்கருடன் எனக்கு நல்லவிதமான நட்பு இருக்கிறது. அவர், என்னுடன் அவரது 14 வயதில் இருந்து விளையாடி வருகிறார். நான் எப்பொழுது அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும், உடனே எனக்கு பதிலளிப்பார்.
சமீபத்தில் யுவராஜ் சிங்கை விமானத்தில் சந்தித்தேன். அவர் மிகவும் அன்பானவர். ஷேவாக்கும் அவரைப் போலதான். ஆனால், இவர்களில் கம்பீர் மட்டும் வித்தியாசமானவர். அவர் மீதும் அன்பு இருக்கிறது. ஆனால், அவர் இன்றும் என் மீது கோபமாகவே இருக்கிறார். அவரது கோபம் சரியானதுதான்.
நானும் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது தேர்வுக்குழுவின் மீது விரக்தியடைந்தேன். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தபின்னரும், இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் ரன்கள் குவித்தபோதும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அதன்பின்னர், நான் டெஸ்ட் கிரிக்கெட்டே விளையாடவில்லை” என்றார் சந்தீப் பாட்டீல்.
Summary
Former chief selector Sandeep Patil has revealed that Gautam Gambhir has never spoken to him since the day he was dropped from the Indian team, despite the two appearing together at several events over the years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

என்னுடைய இடத்தில் இருந்தால் தெரியும்..! தோனியை வம்பிழுத்த கௌதம் கம்பீர்!

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


