சென்னையில் நடைபெற்றுவரும் கடைசி ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் 3 ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒரே மாதிரியாக ஆட்டமிழந்தது கவனம் பெற்றுள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, விளையாடி வருகிறது.
இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷ் துபே, நிதீஷ் குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தப் போட்டியில், 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 102/4 ரன்களை எடுத்துள்ளது. இதில் 4 விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தியுள்ளார்.
இந்த 4 விக்கெட்டுகளில் மூன்று விக்கெட்டுகள் ஒரே மாதிரியாக விழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆஃப் சைடில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் எட்ஜ் வாங்கி ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவிடம் ஆட்டமிழந்தார்கள்.
நான்காவது விக்கெட் பிரசித் கிருஷ்ணா பந்துவீச, ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரிடம் சென்றது. பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சை வர்ணனையாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இதற்கு முன்னதாக இதேமாதிரி ஒரு பந்துவீச்சாளரின் ஓவரில் 3 கேட்ச் எடுத்தவர்களா விவிஎஸ் லக்ஷ்மனன் (இர்ஃபான் ஓவரில், 2004), ஷிகர் தவான் (பும்ரா ஓவரில், 2018) எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, 2-0 என தொடரை வென்றுள்ள இந்திய அணி 3-0 என ஒயிட்வாஷ் செய்யும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
Summary
Identical setups, identical results: 3 wickets from Prasidh Krishna bowling Rohit Sharma catch
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி சதம்..! 218 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆப்கன்!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
ரோஹித் சர்மாவின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும்: மோர்னே மோர்க்கல்

முழு உடல்தகுதி பெற்ற ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா; ஒருநாள் தொடருக்குத் தயார்!
விடியோக்கள்

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

