ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை ஏ அணி 50 ஓவர்களில் 322 ரன்கள் குவித்துள்ளது. இதில் அவிஷ்கா பெர்னாண்டோ சதம் அடித்து அசத்தினார்.
தம்புள்ளாவில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ஏ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 65 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரிடூன் தாவூத்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபர்மானுல்லா சாஃபி 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்.
தற்போது பேட்டிங் செய்துவரும் ஆப்கானிஸ்தான் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இம்ரான் மிர்ம் நூர் உல் ரஹ்மான் டக் அவுட்டாகி சொதப்பினார்கள்.
துலாஜ் சமுதித இந்த இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்து இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இதில் வெல்லும் அணி இந்தியா ஏ உடன் இறுதிப் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மோதவிருக்கிறது.
Summary
Avishka Fernando century sri lanka A set a target 323 for afghanistan A
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

ஆடுகளத்தில் கடும் வாக்குவாதம்; வைபவ் சூர்யவன்ஷிக்கும் இலங்கை வீரருக்கும் என்ன பிரச்னை?

கடைசி டி20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்!
ஹோல்டர் ஆட்ட நாயகன்: இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
