இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இலங்கை வீரருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று (ஜூன் 15) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சூப்பர் ஓவர் நிறைவடைந்த பிறகு, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை வீரர் ககுதாஸ் மதுலன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பேசுபொருளானது.
சூப்பர் ஓவரில் இலங்கை அணி 16 ரன்கள் எடுக்க, இந்திய அணிக்கு 17 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இலங்கை வீரர் ககுதாஸ் மதுலன் வீசிய சூப்பர் ஓவரின் கடைசி மூன்று பந்துகளை சூர்யவன்ஷி எதிர்கொண்டார். கடைசி மூன்று பந்துகளில் அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
சூர்யவன்ஷிக்கும் இலங்கை வீரருக்கும் என்ன பிரச்னை?
சூப்பர் ஓவரில் போட்டியை வென்ற பிறகு இலங்கை வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். களத்தில் இருந்த சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் பெவிலியன் திரும்புகையில், இலங்கை வீரர் ககுதாஸ் மதுலன் சூர்யவன்ஷியை நோக்கி ஏதோ கூறுகிறார்.
இதனால், கோபமடைந்த வைபவ் சூர்யவன்ஷி அவரை நோக்கிச் சென்று அவரது நெஞ்சில் கை வைத்துத் தள்ளுகிறார். இதனையடுத்து, மதுலன் சூர்யவன்ஷியை நோக்கி வேகமாக வர வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இதனால், வைபவ் சூர்யவன்ஷி பெவிலியன் திரும்புகையில் மிகவும் கோபமாக இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கள நடுவர் வெறும் எச்சரிக்கை மட்டும் கொடுப்பாரா அல்லது இரண்டு வீரர்களின் மீதும் நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Summary
A heated argument broke out between Indian player Vaibhav Suryavanshi and a Sri Lankan player during the ongoing tri-nation ODI series in Sri Lanka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உங்களது அதிரடி ஆட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள்; சூர்யவன்ஷிக்கு பயிற்சியாளர் புகழாரம்!
என்னுடைய இலக்கை ஐபிஎல் தொடங்கும் முன்பே எழுதி வைத்துவிட்டேன்: வைபவ் சூர்யவன்ஷி

டி20 போட்டியில் 200 ரன்கள் அடிக்க வேண்டும்: வைபவ் சூர்யவன்ஷி

கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா வைபவ் சூர்யவன்ஷி?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை


