நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் |இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :16 ஜூன் 2026, 9:31 pm IST

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அமெலியா கெர் மற்றும் சோஃபி டிவைன் தலா 45 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஜார்ஜியா பிளிம்மர் மற்றும் மேடி கிரீன் தலா 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிதாலி அயோத்யா, சுகந்திகா குமாரி, சமாரி அத்தப்பத்து மற்றும் நிமஷா மீபேஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the match against Sri Lanka at the Women's T20 World Cup, the New Zealand team scored 150 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.