ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 400க்கும் அதிகமான ரன்களைக் குவித்த அணியாக தென்னாப்பிரிக்காவுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. இரு அணிகளுமே எட்டு முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
லக்னௌவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆபகானிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4, ரோஹித் சர்மா 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
கேப்டன் ஷுப்மன் கில், இஷான் கிஷன் இணைந்து அதிரடியான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். இருவருமே சதம் அடித்து அசத்தினார்கள். இந்தப் போட்டியில் 96/2 ரன்னிலிருந்து 320/3 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
இஷான் கிஷன் 125 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 154 ரன்களுக்கே ஆட்டமிழந்தார்.
கடைசி கட்ட பேட்டர்கள் சொற்ப ரன்களே எடுத்தார்கள். வங்கதேசம் சார்பில் நங்கேயாலியா கரோட்டி 4 விக்கெட்டுகளும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
டெஸ்ட் போட்டியில் (1-0) வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் 2-0 என ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Shubman Gill misses double century; India sets record by amassing 402 runs!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!

டெஸ்ட்டில் அதிக சராசரி... டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஷுப்மன் கில்!

கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் சதம்; வலுவான நிலையில் இந்திய அணி!

அடுத்தடுத்த ஓவர்களில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அவுட்; தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ்!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு
