பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அடுத்தடுத்த ஓவர்களில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அவுட்; தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

News image

படம் | AP

Updated On :31 மே 2026, 8:13 pm IST

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (மே 31) நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவிச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் விளையாடி வருகிறது.

அதிர்ச்சியளித்த ஷுப்மன் கில், சாய் சுதர்சன்!

குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் 18 ரன்கள் எடுத்தது.

இருப்பினும், ஜோஷ் ஹேசில்வுட் வீசிய மூன்றாவது ஓவரில் தவறான ஷாட்டினை விளையாடி கேப்டன் ஷுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, புவனேஷ்குமார் வீசிய அடுத்த ஓவரிலேயே சாய் சுதர்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலமே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்தான். ஆனால், இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சீக்கிரம் ஆட்டமிழந்து வெளியேறியதால் குஜராத் டைட்டன்ஸ் அணி தடுமாறி வருகிறது.

பவர்பிளே முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்திருந்தது.

Summary

In the IPL final, Gujarat Titans openers Shubman Gill and Sai Sudharsan caused a shock by getting dismissed in consecutive overs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.