பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இங்கிலாந்து, அயர்லாந்து தொடரிலிருந்து சிராஜ் விடுவிப்பு.. மாற்று வீரர் இவரா?

இங்கிலாந்து, அயர்லாந்து தொடரிலிருந்து இந்திய வீரர் சிராஜ் விடுவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

முகமது சிராஜ்.

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 7 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி ஜூன் 26 ஆம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜூன் 28 ஆம் தேதியும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து தொடர் ஜூலை 1 தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், பிரதான கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். இளம் வீரர் சூர்யவன்ஷிக்கும் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முமகது சிராஜ், பணிச்சுமை காரணமாக அணியில் விடுவிக்கப்பட்டு அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ​​டி20 உலகக் கோப்பையில் சிராஜ், இந்திய அணியில் தாமதமாகச் சேர்க்கப்பட்டு, ஒரேயொடு போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 17 போட்டிகளிலும் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் நேற்று நிறைவடைந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடி இரண்டு இன்னின்ஸ்களிலும் சேர்த்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

ஜப்பானில் நடைபெறும் ஆசியக்கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, திலக் வர்மா, நிதிஷ் குமார், அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி, பிரசித் கிருஷ்ணா.

Summary

Mohammed Siraj has been rested as part of workload management, with Prasidh Krishna named as his replacement for Ireland and England tours, the BCCI said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.