ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடியது.
மார்கஸ் ஸ்டாய்னிஸ், பிரப்சிம்ரன் சிங் அரைசதம் விளாசல்!
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், பிரியான்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின், கூப்பர் கானலி 14 பந்துகளில் 30 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர்.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அதிரடியில் மிரட்டிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 22 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் யஷ் ராஜ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நண்ட்ரே பர்கர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
Summary
In the IPL match against the Rajasthan Royals, the Punjab Kings, batting first, scored 222 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூர்யான்ஷ் ஷெட்ஜின் அதிரடியால் குஜராத்துக்கு 164 ரன்கள் இலக்கு!

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

மூவர் அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 3-வது வெற்றி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


