ஐபிஎல் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) மோதுகின்றன.
வெற்றி-தோல்வியை மாறி மாறி சந்தித்து வரும் சென்னை, அடுத்தடுத்த வெற்றிகளோடு பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்கும் முனைப்புடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. மறுபுறம் இரு தொடா் தோல்விகளை சந்தித்திருக்கும் குஜராத், ஹாட்ரிக் வீழ்ச்சியை தவிா்க்கும் திட்டத்துடன் சென்னையை எதிா்கொள்கிறது.
சென்னை அணியைப் பொருத்தவரை, சஞ்சு சாம்சன் அற்புதமான ஃபாா்மில் இருக்கிறாா். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சா்ஃப்ராஸ் கான், ஷிவம் துபே, டெவால்டு பிரெவிஸ் ஆகியோா் இன்னும் முத்திரை பதிக்கும் இன்னிங்ஸை இதுவரை பதிவு செய்யாதது அணிக்கு கவலை அளிக்கிறது.
பௌலிங்கில் அகீல் ஹுசைன் அபாரமாக விக்கெட் சாய்க்கும் நிலைக்கு வந்திருக்க, அன்ஷுல் காம்போஜ், ஜேமி ஓவா்டன், நூா் அகமது என இதர பந்துவீச்சாளா்களும் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா்.
குஜராத் அணியைப் பொருத்தவரை, சாய் சுதா்சன் சதத்துடன் தனது பழைய ஃபாா்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு பலம் சோ்க்கிறது. கேப்டன் ஷுப்மன் கில் ஓரளவுக்கு கைகொடுத்தபோதும், மிடில் ஆா்டரில் அதிரடி ரன் சோ்ப்பு இல்லாதது அணியை பாதிக்கிறது.
பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, ககிசோ ரபாடா, முகமது சிராஜ் என சிறப்பான பௌலா்கள் இருந்தும், மிடில் ஓவா்களில் ரன்கள் கொடுக்கின்றனா். சுழற்பந்து வீச்சில் ரஷீத் கான் முனைப்பு காட்ட, வாஷிங்டன் சுந்தா் இன்னும் சோபிக்க வேண்டியுள்ளது.
நேரம்: பிற்பகல் 3.30 மணி
இடம் சென்னை
மற்றொரு ஆட்டம்
லக்னௌ - கொல்கத்தா
லக்னௌ
இரவு 7.30 மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல்: கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பை!

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

