சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 242/2 ரன்கள் எடுக்க, தில்லி அணி 20 ஓவர்களில் 195/9 ரன்கள் எடுத்து, 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் சதம் அடித்தார். 68 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 10 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் விளாசினார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் அவர் நான்கு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு ஐபிஎல் நிர்வாகம் தனது பக்கத்தில் சிறப்புப் போஸ்டர் வெளியிட்டுள்ளது. அவரது சாதனை விவரங்கள்...
1. இந்திய டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (9) அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் (265 இன்னிங்ஸ்) சமன்படுத்தினார். அபிஷேக் இந்த சாதனையை வெறுமனே 78 இன்னிங்ஸில் நிகழ்த்தியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
2. இரண்டாவது வீரராக ஐபிஎல் வரலாற்றில் 10 சிக்ஸர்கள் அடித்தவராக சாதனை படைத்துள்ளார். முன்னதாக, கிறிஸ் கெயில் பலமுறை 10க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை ஐபிஎல் தொடரில் அடித்துள்ளார்.
3. ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச ரன்களை அடித்து அசத்தியுள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெயில் 175 ரன்களுடன் இருக்கிறார்.
4. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகமான முறை (4)130க்கும் அதிகமான ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். முன்னதாக, கிறிஸ் கெயில் 3 முறை இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
5. 78 இன்னிங்ஸில் 7 ஆட்ட நாயகன் விருதுவென்றுள்ளார். சன்ரைசர்ஸ் அணியின் வரலாற்றிலேயே அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்தியராக முன்னிலை வகிக்கிறார்.
Summary
The Abhishek Sharma chapter in the TATA IPL record books just got bigger
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா எளிதாக சதங்கள் விளாசுகிறார்: புஜாரா

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

