ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.
திலக் வர்மா சதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 45 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நமன் திர் 45 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹார்திக் பாண்டியா தலா 15 ரன்களும், குயிண்டன் டி காக் 13 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.
Summary
In the IPL match against the Gujarat Titans, the Mumbai Indians, batting first, scored 199 runs for the loss of 5 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி இடத்துக்குக் கீழிறங்காமல் நூலிழையில் தப்பித்த மும்பை இந்தியன்ஸ்!

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா
திலக் அதிரடி, அஸ்வினி அசத்தல்; மும்பை அபாரம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


