ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்ற பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா, “நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்” என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
மழையின் காரணமாக 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 150/3 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை அணி 11 ஓவர்களில் 123/9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு மிகுந்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி பும்ராவின் முதல் பந்தை சிக்ஸர் அடித்து ஆச்சரியப்படுத்தினார். தோல்விக்குப் பின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேசியிருப்பதாவது:
பவர்பிளேவில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை; எதிரணி நன்றாக விளையாடினார்கள். எங்களது பந்துவீச்சாளர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். பந்துவீச்சு அணியாக நாங்கள் சரியாக விளையாடவில்லை; இதில் பேட்டிங்கை குறைகூற மாட்டேன்.
இது டி20 கிரிக்கெட். இதில் எப்போதுமே சில பந்துகளை நன்றாக வீச வேண்டும். ஒரே ஓவரில் 27 ரன்கள், அந்த ஐந்து பந்துகள் குறித்து பேச வேண்டும். இதுமாதிரி நல்ல பந்துகளை வீசியிருந்தால் நாங்கள் போட்டியில் இருந்திருப்போம். தொடக்க வீரர்கள் எங்களை போட்டியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
இந்தப் போட்டியில் நடந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாளைக்கு காலை என்பது வரும், மீண்டும் சூரியன் உதிக்கும். அதனால், தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த போட்டிக்கு நன்றாக தயாராக வேண்டும் என்றார்.
புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 3 போட்டிகளில் 2ல் தோல்வியுற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 5 சீசன்களாக மும்பை அணி கோப்பை வெல்லாமலே இருக்கிறது.
கடந்த சீசனில் அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸுடன் தோல்வியுற்றது. 2020ல் கோப்பை வென்ற பிறகு தொடர் சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது.
Summary
The morning will come tomorrow, the sun will rise says Mumbai Captain Hardik Pandya.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முக்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு..! ஹைதராபாதை வீழ்த்துவாரா பாண்டியா?

ஆடுகளத்தின் மீது குறை சொல்லும் நபரல்ல நான்... தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா!

திலக் வர்மாவிடம் பேசியது என்ன? ஹார்திக் பாண்டியா விளக்கம்!

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


