ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் பேசும்போது, “பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே ரன்களைக் குவித்து அழுத்தத்தை நீக்கிவிட்டார் சூர்யவன்ஷி” எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.
நேற்றிரவு மும்பைக்கும் ராஜஸ்தானுக்கும் நடந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், போட்டி 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஓவர்களில் 150/3 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை அணி 11 ஓவர்களில் 123/9 ரன்கள் எடுத்தது.
பிகாரைச் சேர்ந்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.1 கோடிக்கு 2025 ஏலத்தில் ராஜஸ்தான் அணிக்கு வாங்கப்பட்டார். 35 பந்தில் சதம் அடித்து வரலாறு படைத்தார்.
இந்தப் போட்டியில் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய ஓவரில் முதல் பந்திலும் மூன்றாவது பந்திலும் சிக்ஸர் அடித்து மிரட்டினார்
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். சூர்யவன்ஷி குறித்து ஜெய்ஸ்வால் கூறியதாவது:
முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷியிடம், ‘ நீ உனது ஷாட்டுகளை விளையாடு’ என்றேன். பும்ரா நிச்சயமாக ஒரு லெஜெண்ட். அவருக்கு எதிராக ரன்கள் குவிப்பது அற்புதமானது. மேலும், பும்ரா ஓவரையே அடித்துவிட்டால், மற்றவர்கள் ஓவரை எளிதாக அடிக்க முடியும் என உணர்வைத் தந்தது.
சூர்யவன்ஷியால் எனக்கு அழுத்தம் குறைந்தது. நான் மற்றவர்களின் ஓவர்களை அடிக்க முடிவெடுத்தேன். எங்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.
நாங்கள் இருவருமே எங்களுக்கு வருகின்றன் ஷாட்டுகளை நன்றாக விளையாடினோம். இருவருக்கும் நேர்மறையான செய்திகளை பகிர்ந்துகொள்கிறோம். சில ஆண்டுகளாக விளையாடுவதால், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுகிறேன் என்றார்.
Summary
Sooryavanshi taking down Bumrah in first over eased pressure, says Jaiswal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரியான் பராக், டோனோவன் ஃபெரைரா அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 226 ரன்கள் இலக்கு!

வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி அபாரம்; கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு!

அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி; இன்ப அதிர்ச்சியளித்த விராட் கோலி!

பும்ராவுக்கு எதிராக விளையாடும் சூர்யவன்ஷி..! வெல்லப்போவது யார்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


