மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிஎஸ்கேவை வீழ்த்திய பிறகு தனுஷ் படக்காட்சியைப் பகிர்ந்த பஞ்சாப்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பஞ்சாப் கிக்ஸ் அணியினர். - படம்: ஐபிஎல்

Updated On :4 ஏப்ரல் 2026, 11:30 am IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி தமிழ்ப் படத்தின் மீம்ஸைப் பதிவிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ’ஜகமே சுதந்திரம்’ படத்தின் காட்சியைப் பகிர்ந்துள்ளது தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 209/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதுவரை பஞ்சாப் - சிஎஸ்கே அணிகள் 33 முறை மோதியிருக்க, சிஎஸ்கே 16 முறையும் பஞ்சாப் 17 முறையும் வென்றுள்ளன. நேற்றிரவு வென்றதன் மூலம் தனது ஆதிக்கத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி நிலைநிறுத்தியுள்ளது.

கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் பஞ்சாப் அணி 7 முறையும் சிஎஸ்கே அணி 1 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் படத்தின் காட்சியைப் பகிர்ந்து, “சென்னையில் மீண்டும் ஒரு வெற்றி” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜகமே தந்திரம் படத்தில் நடிகர் தனுஷ், “சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!” எனக் கூறுவார். இதனைப் போலவே சென்னையை கிண்டல் செய்து பஞ்சாப் அணி பதிவிட்டுள்ளது.

Summary

Punjab Kings Team Shares Memes from Dhanush Movies After Defeating CSK!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.