மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.

News image

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் ஆயுஷ் மாத்ரே - படம் | AP

Updated On :3 ஏப்ரல் 2026, 9:51 pm IST

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் விளையாடியது.

ஆயுஷ் மாத்ரே அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷிவம் துபே 27 பந்துகளில் 45* ரன்களும் (5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), சர்ஃபராஸ் கான் 12 பந்துகளில் 32 ரன்களும் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களும், சஞ்சு சாம்சன் 7 ரன்களும் எடுத்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் விஜயகுமார் வைஷாக் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுஸ்வேந்திர சஹால், சேவியர் பார்ட்லெட் மற்றும் மார்கோ யான்சென் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

Summary

In the IPL match against Punjab Kings, Chennai Super Kings, batting first, scored 209 runs for the loss of 5 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.