ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆஸ்திரேலிய அணி ஒப்பந்தத்தில் இருந்து மேக்ஸ்வெல், கான்ஸ்டாஸ் நீக்கம்!

ஆஸ்திரேலிய அணி ஒப்பந்தத்தில் இருந்து மேக்ஸ்வெல், கான்ஸ்டாஸ் நீக்கப்பட்டது பற்றி...

News image

மேக்ஸ்வெல், கான்ஸ்டாஸ் - ANI

Updated On :1 ஏப்ரல் 2026, 11:08 am IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 2026 - 27 ஒப்பந்தப் பட்டியலில் இருந்து முன்னணி வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் சாம் கான்ஸ்டாஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

2026 - 27 ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் 21 வீரர்களின் பெயர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 24 வீரர்கள் வரை ஒப்பந்தத்தில் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில், 21 வீரர்கள் பெயர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டோகெட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நெசரும் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

ஏற்கெனவே ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற மேக்ஸ்வெல்லின் பெயர் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. இவர், இந்தியா - இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார்.

மேலும், இளம் தொடக்க வீரரான சாம் கான்ஸ்டாஸ், சிறந்த ஃபார்மில் இருக்கும் மேத்யூ ரென்ஷா, வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன், லான்ஸ் மோரிஸ் மற்றும் மேத்யூ ஷார்ய் ஆகியோரின் பெயர்களும் ஒப்பந்தத்தில் இல்லை.

எனினும், ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் அடுத்த ஓராண்டு அதிகளவிலான சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில், ஒப்பந்தத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ஒப்பந்தத்தில் இடம்பெற்றவர்கள்

சேவியர் பார்ட்லெட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், பிரெண்டன் டாக்கெட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குனேமன், மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், போ வெப்ஸ்டர், ஆடம் ஜாம்பா.

Summary

Maxwell and Konstas Dropped from Australian Squad Contracts!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.