மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் நான்காவது முறையாக மாற்றம் செய்துள்ளார்கள். தற்போது, பேட்டிங் செய்துவரும் மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளே முடிவில் ( 6 ஓவர்களில்) 78 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் 41ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மிகவும் முக்கியமான இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் களமிறங்கியுள்ளார்கள். இது இந்த சீசனில் நான்காவது புதிய தொடக்க வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ரோஹித் - ரிக்கல்டன், டி காக் - ரிக்கல்டன், டி காக் - டேனிஸ் மலேவர் விளையாடியுள்ளார்கள். இருப்பினும் தற்போது புதிய இணையினர் நன்றாக விளையாடி வருகிறார்கள்.
முன்னதாக, 2012 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 புதிய தொடக்க வீரர்களுடன் விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு, மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான தொடக்க வீரர்களைக் கண்டறிந்துள்ளது.
Summary
Mumbai Indians make a change to their opening pair for the fifth time! Is the 2012 season repeating itself?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி இடத்துக்குக் கீழிறங்காமல் நூலிழையில் தப்பித்த மும்பை இந்தியன்ஸ்!

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

ரோஹித் சர்மா எப்போது விளையாடுவார்? மும்பை கேப்டன் பதில்!

முக்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு..! ஹைதராபாதை வீழ்த்துவாரா பாண்டியா?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

