பொருள்களை விளம்பரப்படுத்தும் போது, விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) தெரிவித்துள்ளார்.
தவறான விளம்பரங்கள் நுகர்வோரை ஏமாற்றக்கூடும் என எச்சரித்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விளையாட்டைப் பற்றியும், விளையாட்டு வீரர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பதால், நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. அது என்னவென்றால், நாம் ஆதரிக்கும் விஷயங்களை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும்.
அண்மைக் காலமாகவே, குறிப்பாக ஊட்டச்சத்து மற்றும் புரதச் சத்து மாத்திரைகள் தொடர்பான தீங்கிழைக்கும் தவறான விளம்பரங்கள் நுகர்வோர்களைத் தவறாக வழிநடத்தி வருகின்றன.
ஒரு பொருளைச் சந்தைப்படுத்தும்போதோ, அங்கீகரிக்கும்போதோ மற்றும் சமூக ஊடகங்களில் பரிந்துரைக்கும்போதோ பிரபலங்கள் அல்லது விளையாட்டு வீரர்களிடத்தில் ஒரு முறையான விழிப்புணர்வு இல்லை. இதனால் அவர்கள் பல்வேறு விதமான சிக்கல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒரு சமூக வலைதள பிரபங்களாகவோ, ஒரு பொருளின் தூதராகவோ, அல்லது ஒரு பொருளை விளம்பரப்படுத்தும்போதோ உங்கள் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். பிற்காலத்தில் அது உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
Summary
Commerce and Industry Minister Piyush Goyal stated on Tuesday (April 28) that athletes should exercise caution when endorsing products.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: பியூஷ் கோயல்
பிரதமரின் அரசுமுறைப் பயணங்களில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகள்: பியூஷ் கோயல்

பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் உயர்த்தியுள்ளார்: பியூஷ் கோயல்

என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


