மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலில், ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது என மாநிலத்தின் ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை (ஏப்.28) தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே. 4 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இதுகுறித்து, மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
“மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடுத்த மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்க வருமாறு நான் அழைக்கிறேன்.
அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கத்தின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் வலுப்படுத்துவதிலும் ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
West Bengal Governor R.N. Ravi stated on Tuesday (April 28) that every vote is crucial in the state's Assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநர் உரைக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும்! - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech

எரிபொருள் சேமித்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும்: ஆளுநர் ரவி வேண்டுகோள்!

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


